வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2023 (07:20 IST)

நூலிழையில் வெற்றியை தவறவிட்டு ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்!

ஆசியக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 291 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 92 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் பவுலர் குல்பாடின் அதிகபட்சமாக 4விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ரன்களை சேர்த்து இலங்கை அணிக்கு பயத்தைக் காட்டியது. ஒரு கட்டத்தில் ஆப்கன் அணி வெற்றிக்கு அருகில் சென்றது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் கடைசி நேரத்தில் 2 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியுள்ளது.