செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (07:48 IST)

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? சேவாக்குக்கு நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி!

இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூரிய போது ’ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நான் பாரதியார்கள்.” எனக் கூறியிருந்தார்.

மேலும் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜெர்ஸியில் “இந்தியா என்பதற்கு பதிலாக பாரத்” என இருக்க வேண்டும் எனவும் பிசிசிஐக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

சேவாக்கின் இந்த பதிவு டிவிட்டரில் கவனம் பெற்ற நிலையில் தமிழ் சினிமா நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி ஒன்றை சேவாக்குக்கு எழுப்பியுள்ளார். அதில் “மரியாதையுடன் ஒரு கேள்வி சார். இந்தியா என்ற பெயர் இதுவரை உங்களுக்கு பெருமையை தரவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.