வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2023 (07:54 IST)

இந்தியா என்றால் அடிமை என்று அர்த்தம்.. பாரத் தான் பெருமைக்குரிய பெயர்: கங்கனா ரனாவத்..!

இந்தியா என்றால் அடிமை என்று அர்த்தம் என்றும் பாரத் தான் சரியான பெயர் என்றும் நடிகை  கங்கனா ரனாவத்  தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் நடிகை  கங்கனா ரனாவத்  சமூக வலைதளத்தில் கூறிய போது மகாபாரத காலத்தில் இருந்தே பாரதம் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது என்றும் இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றும் தெரிவித்தார். 
 
செவ்விந்தியர்களை அவர்கள் அடிமைப்படுத்தியிருந்ததால் நமக்கும் இந்தியா என்று பெயர் வைத்து நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் வைத்தார்கள் என்றும் ஆங்கிலேயர்கள் கூற்றுப்படி இந்தியா என்றால் அடிமை என்று தான் அர்த்தம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பழங்கால அகராதிகளில் கூட இந்தியன் என்பதன் அர்த்தம் அடிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்  நாங்கள் இந்தியர்கள் அல்ல பாரதியர்கள் என்றும்  கங்கனா ரனாவத் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva