வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (14:03 IST)

ஹர்திக் பாண்ட்யா வந்ததும் அவர் நடையைக் கட்டவேண்டியதுதான்.. சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!

சில தினங்களுக்கு முன்னர் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார்.

இந்நிலையில் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அவர் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவோடு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் அவர் கம்பேக் கொடுப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு பதில் அணியில் இணைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாட, நான்காம் இடத்தில் இறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதனால் ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் பென்ச்சில் உட்கார வைக்கப்படுவார் என்றும் சூர்யாகுமார் யாதவ் அவர் இடத்தில் இறங்குவார் எனவும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.