வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (07:33 IST)

மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்ற இந்தியா… கிட்டத்தட்ட அரையிறுதியில்..!

நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா  மூத்த பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியை வென்ற பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது. 6 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி 12 புள்ளிகளோடும், நெட் ரன்ரேட் 1.405 உடனும் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. இந்த நான்குஅணிகளே அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.