வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (08:58 IST)

ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால்… கோலியை சீண்டும் விதமாக கம்பீர் அடித்த கமெண்ட்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்திய அணி பற்றி காட்டமான விமர்சனங்களை சொல்லிவரும் அவர், அவ்வப்போது பாஸிட்டிவான கருத்துகளைக் கூறுவார். அந்த வகையில் இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பாஸிட்டிவ்வான கருத்தைக் கூறியுள்ளார்.

அதில் “ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால் தன்னுடைய கேரியரில் 45 சதம் வரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் சதங்களைப் பற்றி நினைப்பதில்லை. அவர் தன்னலமற்ற வீரராக இருக்கிறார்.” என கோலியை சீண்டும் விதமாக பேசியுள்ளார்.