புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (08:23 IST)

இந்தியா- வங்கதேசம் இடையே ரயில் பாதை: பிரதமர்கள் மோடி - ஹசீனா தொடங்கி வைப்பு..!

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான ரயில் பாதை சேவையை இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகிய இருவரும் நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 கிலோமீட்டர் நீளமுள்ள அகவுரா மற்றும் அகர்தலா இடையே புதிய ரயில் பாதை தொடங்கப்பட உள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவில் 10 கிலோமீட்டர் வங்கதேசத்தில் இருக்கும் என்பதும்  இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு பரிமாற்றத்திற்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த பாதை  வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம்  ஆகிய நகரங்கள் வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் பாதை மட்டும் என்று இரண்டு பில்லியன் மதிப்பில் மின்சார திட்டமும் தொடங்கப்பட இருப்பதாகவும் இந்த திட்டத்தையும் இரு நாட்டின் பிரதமர்கள் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva