கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!
இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் தன்னுடைய உச்சகட்ட ஃபார்மில் இருந்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் அவர் 700 க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்திருந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.
இதற்கு அவர் தன்னுடைய வழக்கமான இடத்தில் இறங்காமல் ஓப்பனராக களமிறங்குவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அவர் மூன்றாவது இடத்திலேயே இறங்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
கோலியின் ஃபார்ம் அவுட் பற்றி இளம் வீரரான ஷிவம் துபேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கோலியைப் பற்றி பேச நான் யார். அவர் இந்த மூன்று போட்டிகளில் ரன்கள் சேர்க்கவில்லை என்றால் என்ன அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மூன்று சதங்கள் கூட அடிப்பார். அதன் பிறகு இதுகுறித்து எந்த விவாதமும் இருக்காது. அவரின் பேட்டிங் ஸ்டைல் என்னா என்பதை நாம் எல்லோரும் அறிவோம்” எனக் கூறியுள்ளார்.