1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (19:07 IST)

தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி

Pakistan team wc
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தால் வெளியேறிய நிலையில், தேர்வுக்குழு உறுப்பினர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

 இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, அதன் தேர்வுக்குழு  உறுப்பினர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.