வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:35 IST)

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு  25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் நாட்டையே  உலுக்கியுள்ளது.

உத்தரபிரதேசம் மா நிலம் ஆக்ராவில் உள்ள விடுதி  ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில்,  போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், மது அருந்த வற்புத்தியும், பாட்டிலை தலையில் போட்டு உடைத்தும் அப்பெண் துன்புறுத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.