திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:31 IST)

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்..!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோனை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே திடீரென  பாகிஸ்தான் பகுதியிலிருந்து ட்ரோன் ஒன்று பறந்து வந்தது. இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தி செயலிழக்க செய்ததாகவும் அந்த ட்ரோன் வயல்வெளியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி அதை ஆய்வு செய்தபோது அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.  

ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva