நீரில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்..வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நீர் தேங்கிய இடத்தில் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்தவர். மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த பெருமைக்குரியவர்.
இவருக்கு உலகம் முழுவதிலும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துகள் தெரிவித்து வரும் சச்சின், தற்போது தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி மேற்கொள்வது போல், ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், விளையாட்டின் மேலுள்ள காதலும், ஆர்வமும் வேட்கையும் எப்பொழுதும் பயிற்சிக்கான புதிய வழிகளை திறந்து வைக்கும், மேலும் அது நமது செயல்களை உற்சாகப்படுத்தவைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், சச்சின் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகிறார்கள்.