1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:35 IST)

ரூபா குருநாத் மெய்யப்பன் – தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றித் தேர்வு !

பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்க்ட் வாரியத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்ய லோத கமிட்டி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளில் இருக்கக்கூடாது, ஒரே நபர் இரண்டு பதவிகள் வகிக்கக்கூடாது என்பன முக்கியமானவை. இதையடுத்து தமிழகக் கிரிக்கெட் வாரியத்துக்கான தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் மெய்யப்பன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக கடைசி நாளான நேற்றுவரை யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மாநில கிரிக்கெட் சங்கம் ஒன்றில் தலைவரான முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபருமான சீனிவாசனின் மகள் ஆவார்.