வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By VM
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (17:37 IST)

வளர்ற பயல... இப்பிடியெல்லாம் பேசாதீங்க... ரிஷப்புக்கு ஷிகர் தவன் ஆதரவு

விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய ரிஷப் பந்த்தை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிப்பதற்கு ஷிகர் தவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பந்த் களம் இறங்கினார். அஸ்டான் டர்னர் உட்பட மூன்று பேரின் விக்கெட்டுகளை தவறவிட்டார். இதனால் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. நேற்று விராட்கோலி தோல்விக்கு விக்கெட் கீப்பிங் மிஸ்ஸிங் ஆனதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய ரிஷப் பந்த்தை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து,கேலி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் அவர் நொந்து போய் உள்ளார். இந்நிலையில் அவருக்கு சகவீரரான  ஷிகர் தவான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன்,  தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை விமர்சனம் செய்வது தவறு என்றும, வளர்ந்துவரும் இளம் வீரரான ரிஷப் பந்தை இப்போதே விமர்சிப்பது முறையற்ற செயல் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.