பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி! கடைசி ஓவரில் அசத்திய தமிழக வீரர்

Last Modified செவ்வாய், 5 மார்ச் 2019 (21:56 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நாக்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 251 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி நிதானமாக விளையாடி இலக்கை நெருங்கியது

கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கையில் இரண்டு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் தமிழ வீரர் விஜய்சங்கர் பந்துவீச வந்தார்.
முதல் பந்திலேயே அபாரமாக விளையாடி கொண்டிருந்த ஸ்டோனிஸை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கிய விஜய்சங்கர், 3வ்து பந்திலும் விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இன்றைய போட்டி வெற்றி பெற விஜய்சங்கரின் பங்கு மகத்தானது எனினும், சூப்பர் சென்சுரி அடித்த விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இதில் மேலும் படிக்கவும் :