குல்திப், சாஹல் உலகிலேயே சிறந்த கூட்டணி! பாராட்டிய விராட் கோலி!

Last Updated: சனி, 2 மார்ச் 2019 (16:10 IST)
உலகிலேயே பலமான சுழற்பந்து கூட்டணி என்றால் அது குல்திப் யாதவும், சாஹலும் தான் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.


 
இந்திய அணியின் வெற்றி சுழற்பந்து கூட்டணியாக திகழ்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு சவாலாக தற்போது குல்திப் யாதவும், சாஹலும்  இருக்கின்றனர். இவர்களின் கூட்டணி தான்  மிடில் ஓவர்களில் எதிரணியை பந்தாடி வருகிறது. 
 
இந்நிலையில்,  இவர்கள் இருவரையும் புகழ்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது,  "தற்போதைய நிலையில் உலகளவில் குல்திப்பும், சாஹலும் தான் மிகச்சிறந்த சுழற்பந்து கூட்டணியாக திகழ்கின்றனர்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இவர்கள் இருவரின் பங்கு சிறந்து விளங்கியது.  குறிப்பாக மிடில் ஓவர்களில் இவர்கள் விக்கெட் எடுக்கும் விதமும் , ரன்களை கட்டுப்படுத்தும் விதமும் மிகவும் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்தது.


இதில் மேலும் படிக்கவும் :