''2 வது குழந்தையை வரவேற்க தயார்''- விராட் கோலி குறித்த அப்டேட் கொடுத்த பிரபல வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பாலுவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், கோலி பற்றிய புதிய அப்டேட்டை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
அதில், விரட் கோலி, அனுஷ்கா தம்பதி தங்கள் 2 வது குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். அதனால் கோலி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார் என்று தன் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.