வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (07:16 IST)

ஐபிஎல் முடிந்த 4 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷி..!

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது  2024 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டி மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த போட்டிகள் மே 26 ஆம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை முழுமையாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே வரும் ஜூன் ஒன்றாம் தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடர் முடிந்து நான்கே நாட்களில் டி20 உலக கோப்பை தொடர்  தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva