1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (09:38 IST)

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் அபரிவிதமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார். அவர் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புவது பற்றி அவர் பேசியுள்ளார். அதில் “நான் இப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்ற உணர்வைப் பெற்றுள்ளேன். என்னுடைய கண்கள் நன்றாகவே உள்ளன. அதனால் நான் களத்துக்கு சென்று பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசையை இப்போது பெற்றுள்ளேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்புவாரா அல்லது உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.