மாற்று வீரராக வந்து ஹீரோவான ரஜத் படிதார்… ரசிகர்கள் முதல் மூத்த வீரர்கள் வரை பாராட்டு!
RCB அணி நேற்றைய முதல் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு சென்றுள்ளது.
ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் குவாலிபயரில் வெற்றி பெற்ற குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இதையடுத்து மற்றொரு எலிமினேட்டர் போட்டியில் RCB அணியும் லக்னோ அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.
ஆனால் இந்த சீசனில் அவர் முதலில் RCB அணியால் எடுக்கப்படவில்லை. ஆனால் அணியில் உள்ள வீரர் ஒருவர் காயத்தால் வெளியேற, மாற்று வீரராக அணிக்குள் இணைந்தார் படிதார். ஆனாலும் முதலில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இறுதிப் போட்டிகளில் மட்டுமே அணிக்குள் இடம் கிடைத்தது. இப்படி போராடி வாய்ப்பை பெற்ற அவர் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார். இதையடுத்து நேற்றைய அவரின் வெற்றி இன்னிங்ஸை ரசிகர்கள் முதல் மூத்த வீரர்கள் வரை பாராட்டி வருகின்றனர்.