வியாழன், 5 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (09:20 IST)

ரோஹித் ஷர்மாவின் வளர்ச்சிக்கு மும்பை இந்தியன்ஸ் முக்கியக் காரணம்… முன்னாள் பல்தான் அட்வைஸ்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் அணித்தாவல் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “ரோஹித் ஷர்மா மும்பை அணில் இருந்து விலகும் முடிவில் உள்ளார். அவர் லக்னோ அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதனால் அடுத்த சீசனில் அவர் கண்டிப்பாக மும்பை அணியில் இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கருத்து ஒன்றை முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மாவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கிடைத்த வெற்றிகளைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியால் ரோஹித் ஷர்மாவுக்குக் கிடைத்த  வளர்ச்சியும் குறிப்பிடத்தகுந்தது. அவர் இன்று இருக்கும் நிலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் முக்கியக் காரணம். அதனால் அவரால் எளிதாக மும்பை அணியை விட்டு வரமுடியாது என நினைக்கிறேன். அப்படி அவர் வரும் பட்சத்தில் அதைப் பற்றி சொல்ல எனக்கு எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.