வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:45 IST)

ஐபிஎல் வர்த்தக மதிப்பு 10 சதவீதம் குறைவு… பின்னணி என்ன?

உலகக் கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. இதில் விளையாட உலகில் உள்ள அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேசக் கிரிக்கெட் ஆடி சம்பாதிக்கும் பணத்தை இரண்டே மாதங்களில் ஐபிஎல் விளையாடுவதன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மெஹா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டு புது அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சில அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஐபிஎல் தொடரின் வர்த்தக மதிப்பு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஏலத்தில் எடுத்துள்ள ஸ்டார் மற்றும் வயாகாம் 18 ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைய இருப்பதுதான் என சொல்லப்படுகிறது. இரு நிறுவனங்கள் ஒன்றால் ஏலத்தின் போது போட்டி இருக்காது என்பதால் இந்த 10 சதவீத சரிவு என சொல்லப்படுகிறது.