1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 4 டிசம்பர் 2024 (09:20 IST)

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார். அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார். அது மட்டுமில்லாமல் உடல் எடைப் பெருகி அவர் சுணக்கமாகக் காணப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.

இதனால் இந்தமுறை ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அவரும் அவரைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தை ‘வீணடிக்கப்பட்ட திறமையாளர்’ என்பதுதான். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் பிரித்வி ஷாவுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.

அதில் “சில வெற்றிக்கதைகள் எப்போதுமே ‘மறுவருகை’ கதைகளாகதான் இருந்துள்ளன.  பிரித்வி ஷாவை சுற்றி அவர் மேல் அக்கறைக் கொண்ட நபர்கள் இருப்பார்களானால், அவரை உட்காரவைத்து “எல்லா சமூகவலைதளங்களில் இருந்தும் அவரை வெளியேற சொல்லி, உடற்தகுதியில் முழு கவனத்தையும் செலுத்த சொல்ல வேண்டும்.  அதுதான் அவரை அவருடைய பழைய வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அவர் இழக்கவே கூடாத திறமையாளர்” எனக் கூறியுள்ளார்.