1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (07:31 IST)

உலகக் கோப்பை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற போவதில்லையா?

உலகக் கோப்பை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற போவதில்லையா?
நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்றிரவு பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அந்த நிகழ்வு நடக்காது என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஆஷா போஸ்லே, ரன்வீர் சிங், தமன்னா பாட்டியா, ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் அரிஜித் சிங் போன்ற நட்சத்திரங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, பிசிசிஐ , அனைத்து கேப்டன்களை மட்டும் லேசர் ஷோ ஒன்றை நடத்தி உலகக் கோப்பையை தொடங்கி வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு விழா அல்லது அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கு முன் ஒரு பெரிய விழாவை பிசிசிஐ நடத்தும் எனவும் சொல்லப்படுகிறது.