புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:00 IST)

உலகக் கோப்பைக்கு இலவச டிக்கெட் வழங்கும் பாஜக

உலகக்கோப்பை முதல் போட்டியைக் காண 40ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு வழங்க பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அகமபாதாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள உலகக்கோப்பை முதல் போட்டியைக் காண 40ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு வழங்க பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அகமதாபாத் மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் இருந்து வார்டுக்கு  சும்னார் 800 பெண்கள் வீதம் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.