1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:38 IST)

மும்பைக்கு அடுத்து எனக்குப் பிடித்த இடம் இதுதான்- சச்சின் ஓபன் டாக்

உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென்று தனியிடம் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கள், இதுவரை இவருடைய சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், உலகின் பல இளைஞர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்மாதிரியாக உள்ள சச்சின் டெண்டுகரின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

அவரிடம் இந்தியாவில் மும்பை வான்கடே மைதானத்தைவிட வேறு எந்த மைதானம் பிடிக்கும் என்று கேட்டக்கப்பட்ட கேள்விக்கு, சென்னையிலுள்ள ’’ சேப்பாக்கம் ‘’என்று பதிலளித்துள்ளார்.

இதனால், தமிழக ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.