செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (08:07 IST)

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தின் முதல் நாள் பல ஆச்சரயங்களைக் கொடுத்தது. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருந்த டேவிட் வார்னர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் தாய்வீடு திரும்பியுள்ளார். அவரை சி எஸ் கே அணி  9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின் “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். நான் சென்னை அணிக்காக 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியது. 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் போட்டி போட்டது போல, இப்போதும் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தோனி மற்றும் ருத்துராஜ் ஆகியோருடன் விளையாடக் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.