வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (14:36 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதனை அடுத்து இந்திய அணி இரண்டாவது 2வது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடிய நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலம் 487 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸி அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது இன்னிங்ஸை நிதானமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 238 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றுள்ளது.