செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:27 IST)

அனுபவத்தை பணத்தால் வாங்க முடியாது… ஷேவாக் காட்டமான விமர்சனம்!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற அவர், சில ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிவிட்டு, பின்னர் ஓய்வு பெற்றார். இப்போது கிரிக்கெட் வர்ணனை மற்றும் அணிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு இளம் வீரரான சாம் கரண் பற்றி விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “அனுபவம் என்பது பணத்தால் வாங்க முடியாதது. 18 கோடிக்கு வாங்கி விட்டதாலேயே சாம் கரணால் போட்டியை வெல்ல முடியாது. அதற்கு அனுபவம் தேவை. அவர் இன்னும் அதைப் பெறவில்லை.” எனக் கூறியுள்ளார்.