இந்த தடவை கண்டிப்பா ஈ சாலா கப் நமதே..! – முகமது சிராஜ் உறுதி!
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி ப்ளே ஆப் முன்னேறியுள்ள நிலையில் இந்த முறை வெல்வோம் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடந்து வந்த நிலையில் லீக் ஆட்டங்கள் முடிந்து முதல் நான்கு அணிகள் ப்ளே ஆப்க்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இடம் பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஒருமுறையாவது கப் வெல்லுமா என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த முறை ப்ளே ஆப் சென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் “பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் காலம் வந்துவிட்டது. இதுவரை மூன்று முறை ஃபைனல்ஸ் சென்றுள்ளோம். இந்த முறை சிறப்பாக விளையாடி நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்வோம்” என தெரிவித்துள்ளார்.