1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 மே 2022 (16:41 IST)

இன்றைய போட்டி… பூம்ராவுக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? RCB ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்றைய ஐபிஎல் போட்டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த போட்டியின் வெற்றி தோல்வி ப்ளே ஆஃப்க்கு செல்லும் அணிகளை தீர்மாணிக்கும்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை நடந்த எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று நடக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெல்லி ப்ளே ஆஃப்க்கு செல்லும். தோல்வி அடைந்தால் RCB அணி செல்லும். அதனால் இந்த போட்டியை RCB அணியும் மிக ஆவலாக பார்க்க காத்துள்ளது. இந்நிலையில் பூம்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஜுனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற தகவல் RCB ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.