1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (21:00 IST)

மெர்ஸியின் ஜெர்ஸி நிகழ்த்திய சாதனை!

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான பிரிவு உபச்சார விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற கிளப்பை விட்டு வெளியாறுவதற்கு கதறி அழுதார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் சேர்ந்துள்ள மெஸ்ஸியை அந்த அணி கொண்டாடிவருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே அந்த அணியில் நெய்மர் 10 ஆம் நம்பர் ஜெர்ஸி அணிந்துள்ள நிலையில் தற்போது அந்த அணியில் புதியாக நுழைந்துள்ள மெஸ்ஸிக்கு எந்த நம்பர் ஜெர்ஸியில் இடம்பெறும் எனக் கேள்வி எழுந்த நிலையி அவர் 30 நம்பர் ஜெர்ஸியைத் தேர்வு செய்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும் ஆன்லைனில் 30 ஆம் எண் ஜெர்ஸிகள் விற்பனை தொடங்கியது. இதில் சுமார்  அரை மணி நேரத்தில் 30 நம்பர் ஜெர்ஸிகள் ( ஒன்றரை லட்சம்) அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாகத் பாரிஸில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கிறது.