வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:42 IST)

முன்னாள் அமைச்சருக்கு இந்த நிலைமையா?

அமெரிக்க நாட்டு படைகள் அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதியின்படி ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டுவெளியேறி வருகின்றனர்.
 

எனவே, பழமைவாத  தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை  கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டிலிருந்து மக்கள்  தங்கள் சொந்த நாடுகளுக்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சயது அகமது  ஷா சாதாத் ஜெர்மன் நாட்டில் உள்ள பிரபல நிறுவனத்தில் பீட்சா விற்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சருக்கு இந்த நிலைமையா என இணையதலளத்தில் அவர் சைக்கிளில் சென்று பீட்சா விற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.