வழிபாட்டுத் தலங்களுக்கு தடை தொடரும் !
கொரொனா பரவலை தடுக்க கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை தரிசனத்திற்கு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது.
கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை விரைவில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் , கல்லூரிகள் திறக்க சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை தரிசனத்திற்கு விதித்துள்ள தடை தொடரும் எனவும், செப்டம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறந்த பின்னரும் கொரொனா தொற்றுகள் குறைவாக இருந்தால் தரிசன அனுமதி பற்றி முடிவெடுக்கப்படும் என மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது. #வழிபாட்டுத்_தலங்களுக்குதடை_தொடரும்