1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL postponed suspended to one week

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்புக் கருதி மக்கள் அதிகம் கூடும் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதை பிசிசிஐ உறுதிப்படுத்தியது. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக அறிவித்தது.

இதற்கிடையில் தற்போது எஞ்சிய ஐபிஎல் போட்டுகள் ஒரு வார காலத்துக்குத் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு வாரத்துக்குப் பின் வெளிநாடு அல்லது இந்தியாவிலேயே தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!