ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் கோலிக்கு கன்கஷன் சோதனை!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை போட்டி பரபரப்பாக நேற்று நடந்த நிலையில் இந்திய அணி கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார் கோலி. அவர் 116 ரன்களில் 85 ரன்கள் சேர்த்து ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார்.
இந்த போட்டியில் அவர் மிட்செல் ஸ்டார்க் பந்தை எதிர்கொண்ட போது பந்து ஹெல்மெட்டை தாக்கியது. இதையடுத்து அவருக்கு விரைவில் கன்கஷன் சோதனை ஒன்று நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.