தொடர்புடைய செய்திகள்
- “போட்டி முடியும் வரை ஒரே இடத்தில் நின்றேன்… கால்கள் வலிக்கின்றன” –அஸ்வினின் நம்பிக்கை!
- உலகக் கோப்பையுலும் வேலையைக் காட்டிய ஜார்வோ… ஐசிசி விதித்த ரெட் கார்ட்!
- கொஞ்ச நேரம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடு… ராகுலுக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த கோலி!
- அதிரடி காட்டும் ஆஸ்திரேலியா; அடுத்தடுத்து டக் அவுட்! – ரசிகர்கள் அதிர்ச்சி
- இந்தியாவின் பவுலிங்கில் திணறும் ஆஸ்திரேலியா; மாஸ் காட்டும் ஜட்டு!
நேற்றைய போட்டியில் சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி!
நேற்று இந்திய அணிக்காக தனது மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார் விராட் கோலி. இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது நிதானமாக விளையாடி 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஐசிசி நடத்தும் தொடர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி தனது 67வது போட்டியில் 2,720 ரன்களை கடந்தார்.
இதற்கு முன்பாக சச்சின், 61 போட்டிகளில் 2,719 ரன்கள் குவித்ததே சாதனையையாக இருந்தது. இரண்டு சதங்கள் மற்றும் 25 அரை சதங்கள் உட்பட 65.23 என்ற சராசரியுடன் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார்., சச்சின் டெண்டுல்கர் ஒயிட்-பால் ஐசிசி போட்டிகளில் ஏழு சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 52.28 சராசரியில் ரன்களைக் குவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்