1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi ashwin superstious belief about kohli catch

“போட்டி முடியும் வரை ஒரே இடத்தில் நின்றேன்… கால்கள் வலிக்கின்றன” –அஸ்வினின் நம்பிக்கை!

கோலி கேட்ச்
நேற்று நடந்த ஆஸ்திரேலியா- இந்தியா போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி பவுலர்கள் ஆரம்பம் முதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை ஈட்டியது.

இதையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆடவந்த இந்திய அணி 2 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கோலி மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்த போட்டியில் கோலி 12 ரன்களில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச்சை கோட்டை விட்டார் மிட்செல் மார்ஷ். அந்த சம்பவம் பற்றி பேசிய அஸ்வின் “அந்த கேட்ச் காற்றில் இருந்த போது, நான் எழுந்து என்னுடைய அறைக்கு ஓடினேன். சென்று கொண்டிருக்கும்போதே கூட்டத்தின் கோஷம் எழும்பியதும். கேட்ச் விடப்பட்டது என தெரிந்துகொண்டேன். அந்த நிமிடத்தில் இருந்து போட்டி முடியும் வரை நான் அதே இடத்தில்தான் நின்றேன். இப்போது என் கால்கள் வலிக்கின்றன” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
நேற்றைய போட்டியில் சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி!