தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!
இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஆரம்பத்தில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குக் காரணம் மெதுவான அமெரிக்க ஆடுகளங்களில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என நினைத்துதான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்காமல் வழக்கம் போல தன்னுடைய இடமான மூன்றாவது இடத்தில் ஆடவேண்டும் எனவும் கருத்துகள் எழுந்தன. அதே நேரத்தில் கோலி வெகு விரைவிலேயே மீண்டு தன்னுடைய ஃபார்முக்கு வருவார் என்று அவருக்கு ஆதரவு குரல்களும் முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்தன.
இப்போது சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் மெல்ல தன் பழைய ஃபார்முக்கு திரும்பி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக ஆடி 37 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய இரண்டு வடிவங்களிலும் சேர்த்து) 3000 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.