1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Australia defeat by afganisthan in super 8

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதிர்ச்சி முடிவாக ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் சேர்த்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் இப்ராஹிம் ஸார்டான் ஆகியோர் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பியதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

இதையடுத்து பேட் செய்த ஆஸி அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் 19.2 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!