1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2024 (15:03 IST)

இந்தியாவுக்காக அதிகப் போட்டிகள்… தோனியைப் பின்னுக்குத் தள்ளி சாதனைப் படைத்த கோலி!

ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு வீரர் கிரிக்கெட்டின் முகமாக  இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் மற்றும் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக சாதனைகளைப் படைத்த வீரராக கோலி இருக்கிறார்.

சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் அந்த டி 20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த கோலியின் புகைப்படம்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளார். அவர் 536 போட்டிகள் விளையாடியுள்ளார். சச்சின் 664 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.