ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்ல பிசிசிஐ-இடம் அனுமதி கேட்டுள்ளாரா கோலி?
விரைவில் நடக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பாஜக பிரமுகர்கள் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல கோலி, பிசிசிஐயிடம் அனுமதிக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிசிசிஐ அனுமதி அளிக்கும் பட்சத்தில் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.