ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

ராமர் கோவில் திறப்பு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை: நாகலாந்தில் ராகுல் காந்தி விளக்கம்..!

ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என சமீபத்தில் அதிகாரம் பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். 
 
மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரையை தொடர்ந்து வரும் ராகுல் காந்தி நாகலாந்து மாநிலத்தில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது ராமர் கோவில் திறப்பு விழா என்பது மோடியின் அரசியல் விழாவாக மாறிவிட்டது. 
 
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இந்து அமைப்புகளில் சிலரும், இந்து மடாதிபதிகளும் இதே கருத்தைதான் தெரிவித்திருக்கின்றனர். அனைத்து மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடியது காங்கிரஸ் கட்சி. 

 
எனவே பிரதமர் மோடியை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் விழாவில் காங்கிரஸ் கட்சியால் பங்கேற்க முடியாது என்று நாகலாந்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என  சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva