ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (21:47 IST)

ராமராஜ்ஜியம் உண்மையாகின்றது! ராமரின் அபாரமான சக்தியை பாருங்கள்! – வி.டி.சர்மா!

vd sharma
ராஜ் பைதா திரிலோகா. ஹர்ஷித் பயே கயே சப் சோகா

ராமர் கோவிலின் திறப்பு விழாவின் போது மேற்கண்ட பாடல் உண்மையாக ஆகின்றன. ஆகஸ்டு 5 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தோடு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் அப்போது மக்களிடம் உரையாற்றியபோது “ராமரின் அபாரமான சக்தியை பாருங்கள். கட்டுமானத்தை இடித்தொழித்தபோதும் எந்த கல்லும் பகவான் ராமரின் இருப்பை அழித்துவிடவில்லை. பகவான் ராமப்பிரானுக்கு நம் மனதில் எப்போதும் இடம் உண்டு” என கூறினார். ராமப்பிரான் இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்குகிறார். மேலும் மக்களின் சிந்தனையிலும் ராமர் குடிகொண்டிருக்கிறார். இதனால்தான் ராமர் புருஷோத்தமனாக மதிக்கப்படுகிறார்.
(ராம் கஜ் கிஹன் பினு, மோஹி கஹான் விஸ்ரம்)




ஜனவரி 22, 2024-ல் பாரத பிரதமர் நரேந்திர மோடி ராம் லாலாவை மிகப் பெரிய கோவிலில் பிரதிஷ்டை செய்வோம் என உறுதிமொழி எடுத்திருந்தார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தங்க பக்கங்கள் சரயு நதிக்கரையில் எழுதப்பட உள்ளன. சோம்நாத்தில் இருந்து காசி விஸ்வநாத் வரை அயோத்யா ஒரு வரலாற்றை உருவாக்கப்போகிறது. ஒட்டு மொத்த தேசமுமே ராமநாமத்தில் மூழ்கப்போகிறது. 5 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஒன்று இப்போது பெருங்களிப்புடன் வெளிவருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நிலையான அர்ப்பணிப்பும் பக்தியும், ஒரு உன்னதமான சூழலுக்கான தொடக்கத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

ராம்லாலாவின் பிரதிஷ்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழா மட்டும் அல்ல, இது ஒரு கலாச்சார பரிணாமத்தின் குறியீடு. அயோத்தியாவில் கட்டப்பட்ட இந்த கோவில் நமது தேசத்தின் வழிபாட்டுத் ஸ்தளம் மட்டுமல்ல, நமது முன்னோர்களின் தியாகத்திற்கான உத்வேகமும் கூட. கரசேவகர்களின் இயக்கமும் அவர்களின் தியாகத்தின் முழுத்தோற்றமாகத்தான் தற்போது ராம்லாலாவின் எழுச்சி நிகழ்ந்துள்ளது.

ராமர் கோவிலை எழுப்புவது மட்டுமே லட்சியம் அல்ல, ராம்ராஜ்யமே லட்சியம். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக பதவியேற்றதில் இருந்து அவர் ராமராஜ்யத்தை உருவாக்க அயராது உழைத்து வருகிறார். மோடி அரசு ஒரு பக்கம் நமது தேசத்தின் பண்டைய கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் பலப்படுத்தி வருகிறது, மறுபக்கம் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை பிரதான குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆர்ட்டிக்கிள் 370 நீக்கப்பட்டு, பாரத தாய்க்கு விடுதலை அளிக்கப்பட்டது. அதே போல் சிறுபான்மையின பெண்களின் துயர் துடைக்க முத்தலாக் தடை செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது அடுப்பூதும் பெண்களின் அவஸ்தையை குறைக்க சிஎன்ஜி கேஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டது, குறிப்பாக பெண்களின் தன்மானத்தை காப்பதன் முயற்சியாக நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஆரோக்கியத்தை பேணிகாக்க ஆயுஷ்மான் பாரத் யோஜனா, வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, 80 கோடி மக்களின் பசியை போக்க இலவச ரேஷன் போன்ற திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக கிசான் சம்மன் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இலவச கொரோனா தடுப்பூசிகளும் விநியோகிக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.

ராமராஜ்யத்தை உண்மையாக்குவதற்கு மோடி அரசு மிக தீவிர முயற்சி செய்திருக்கிறது. தேசத்தின் ஆன்மீக விழிப்புணர்வு விழித்துகொண்டுள்ள இவ்வேளையில் அம்ரித் காலால் நாடு பாதுகாப்பான ஒன்றாக இருக்கப்போகிறது. ராம்ராஜ்யத்தை போல் ஜனநாயகத்தை பலப்படுத்த அரசு மக்களுடன் பங்குகொள்ள வேண்டும். தற்காலத்தில், இந்தியா தனது கலாச்சார பாரம்பரியத்தால் பெருமை கொள்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தனது புனித ஸ்தலங்களை மறுகட்டுமானம் செய்து வருகிறது, மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னனி நாடாக திகழ்ந்து வருகிறது. இன்று, காசி விஸ்வநாதர் கோவிலை மறுகட்டுமானம் செய்வதுடன், நரேந்திர மோடியின் அரசு கிராம வளர்ச்சிக்காக 30,000 பஞ்சாயத்து கட்டிடங்களை உருவாக்கி வருகிறது. கேதர் ஆலயம் புத்தாக்கம் பெற்றபோது அதே வேளையில் 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டன.

மஹாகல் லோக் மட்டுமல்லாது 14 கோடி இல்லங்கள் பயன்பெறும் வகையில் இரண்டு லட்சம் தண்ணீர் தொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மகரிஷி வால்மிகி விமான நிலையம் மற்றும் அயோத்யா ரயில் நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாவின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முன்னேறிய இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கான உந்துசக்தியாக அயோத்யா இருக்கிறது” என குறிப்பிட்டார்.

உலகில் எந்த ஒரு தேசம் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய விரும்புகிறதோ அந்த தேசம் தனது பாரம்பரியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நமது பாரம்பரியமே நமது உத்வேகம். அதுவே நம்மை சரியான பாதைக்கு வழிவகுக்கும். தற்போது அயோத்யா, பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சிறப்புவாய்ந்த ஒன்றாக மட்டுமல்லாது வளர்ச்சியின் தெய்வீகத்தன்மையையும் கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியும் பாரம்பரியமும் கலந்த ஒரு கலவையாக இந்தியாவை உச்சத்தில் பார்க்ககூடும்.

துளசிதாசர் தனது ராமசரிதமானஸில் ஜனநாயக, பொது நலன்களின் அடிப்படையிலான தேச கட்டமைப்பை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவை பற்றி ஸ்ரீராமர் அதில் இவ்வாறு கூறுகிறார், “முக்கிய முக்சோ சாஹியே, கன் பான் கோ ஏக், பலே போஸ் சாகல் அங்க், துளசி சஹித் விவேக்”.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், ஒரு அரசு பாரபட்சமான அரசாக இருக்க கூடாது, அதே போல் சமுதாயத்தின் கடைநிலை மனிதனின் உயர்விற்கான அக்கறையை முக்கியமான ஒன்றாக ஒரு அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் இது உண்மையாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் பெருமையாக கூறிக்கொள்ளலாம்.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் புதிய இந்தியாவின் சாட்சியாக இந்தியர்கள் மட்டுமல்லாது உலக மக்களுமே சாட்சியாக இருக்கிறார்கள். இந்திய கலாச்சாரத்தை மற்ற அனைத்து நாடுகளும் பின்பற்றுவதில் பெருமை கொள்கின்றன. புதிய இந்தியா அதன் வலுவான நம்பிக்கையை நோக்கி விழிப்போடு சென்றுகொண்டிருக்கிறது. இது ராமராஜ்ஜியத்தின் முன் தேவையும் கூட.

              எழுதியவர் – மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்