1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (10:15 IST)

டி 20 போட்டிகளில் இதுவரை யாரும் படைக்காத சாதனை… கைரன் பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் கைரன் பொல்லார்ட் டி 20 போட்டிகளில் இதுவரை 600 போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலமாக கவனம் பெற்ற வீரர்களில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கைரன் பொல்லார்ட் மிக முக்கியமானவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை ஏற்றும் வழிநடத்தி கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். விரைவில் டி 20 உலகக்கோப்பை தொடர் வர உள்ள நிலையில் பொல்லார்டின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் உலகெங்கும் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் 100 பந்துகள் கொண்ட போட்டித்தொடரில் லண்டன் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் தனது 600 ஆவது டி 20 போட்டியில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார். இதை வேறு எந்த வீரரும் இதற்கு முன் படைத்ததில்லை.

600 போட்டிகளில் 11,709 ரன்களை சேர்த்துள்ள பொலார்ட், 309 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆனார் பொலார்ட்.