ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:57 IST)

டி-20 போட்டி : டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு....

india 3rd
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. தற்போது டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த  நிலையில் இன்றைய 3 வது டி-20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே முதலில் பேட்டிங் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் 11 ரன் களுடனும்,,கெயல் மேயர்ஸ் 29 ரன் களுடனும் விக்கெட் இழப்பின்றி மொத்த 41 ரன் களுடன் விளையாடி வருகின்றனர்.

இப்போட்டிலும் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.