1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (10:53 IST)

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி! – போட்டி விவரங்கள் இதோ!

India West Indies
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுபயண ஆட்டத்திற்காக செல்லவுள்ள நிலையில் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சுற்றுபயண ஆட்டங்களில் விளையாட வெஸ்ர் இண்டீஸுக்கு அடுத்த ஜூலை மாதத்தில் புறப்பட உள்ளது. அங்கு வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான போட்டி அட்டவணையை இரு நாட்டு அணிகளும் வெளியிட்டுள்ளன. அதன்படி,

முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 22
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 24
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 27

மூன்று ஒருநாள் போட்டிகளும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.

டி20 போட்டிகள்

முதல் டி20 போட்டி – ஜூலை 29
இரண்டாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 1
மூன்றாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 3
நான்காவது டி20 போட்டி – ஆகஸ்ட் 6
ஐந்தாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 7