1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Visa problem for Indian and west indies players for going to america

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்… 4 & 5 ஆவது டி 20 போட்டிகள் நடப்பதில் சிக்கல்… இப்படி ஒரு பிரச்சனையா?

இந்தியா
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. தற்போது டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி இரண்டு போட்டிகளை அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடத்த திட்டமிட்டார்களாம். ஆனால் இன்னும் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் பலருக்கும் விசா இன்னும் வாங்கவில்லையாம். இதை செய்ய வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சொதப்பி விட்டதாம். இந்நிலையில் இப்போது கடைசி நேர அவசரத்தில் விசா பெறும் வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை விசா கிடைக்கவில்லை என்றால் மீண்டும் வெஸ்ட் இண்டீஸிலேயே நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்!