திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:22 IST)

”எங்களுக்கு காயமெல்லாம் ஒரு மேட்டரே இல்லை”; அசால்ட் காட்டும் வில்லியம்சன்

வீரர்கள் காயம் அடைவதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி தான் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றியடைந்தது. அதே போல் ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து வருகிற 21 ஆம் தேதி முதல் இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நியூஸிலாந்த் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ”டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடவுள்ளது ஒரு அற்புதமான வாய்ப்பு. வீரர்கள் காயமடைவது விளையாட்டின் ஒரு பகுதி தான்” என கூறியுள்ளார்.