திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (20:06 IST)

சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இன்று இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிஸ்ஸை விளையாடி வருகிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் பேட்ஸ்பேன் ஜோ ரூட் 29 ரன்கள் அடித்தபோது, இந்தியாவுக்கு எதிரான தன் அதிகபட்சம் 2555 ரன்களை எட்டினார்.

அதன்மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் -2555, சச்சின் -2535, சுனில் கவாஸ்கர்-2483

அலெஸ்டர்-2431, கோலி-1991 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.